நினைவேந்தல் 1

2005 ஆம் ஆண்டு… மேடம் என்னை அழைத்து ஒரு பதிவு தபால் அனுப்பவேண்டும் என்றார்கள்…
கொடுங்கள் அனுப்பிவிடுகிறேன் என்றேன்…
எவ்வளவு பணம் தேவைப்படும் என்றார்….
200 ரூபாய் ஆகும் என்றேன்…
பெருமூச்சு விட்டு.. அப்பாடா என்னிடம் இப்போது 200 ரூபாய் தான் இருக்கிறது… நல்லவேளை என்றார்…
நித்தி….இது மிகவும் முக்கியமான ஆவணம்…உடனே அந்த அலுவலகத்துக்கு சென்றாக வேண்டும்…முதல் வேலையாக இதனை பதிவு தபால் மூலமாக அனுப்பு என்றார்….
ஆவணங்களை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்… அப்போது “கால்லிங் பெல்” அடிக்க… நான் கதவை திறந்தேன்…ஒரு பெண்மணி நின்றார்…. மேடம் பாக்க வேண்டும் என்றார்… மேடம் அவரை அழைத்து பேசினார்…
அந்த பெண்மணி தன் மகனுக்கு கல்வி செலவுக்கு பணம் தேவைப்படுவதாக கூற… மேடம் என்னை அழைத்து என்னிடம் கொடுத்த 200 ரூபாயை வாங்கி எந்த பெண்மணியிடம் கொடுத்தார்…
அந்த பணம் அந்த பெண்மணிக்கு போதுமானதா என்று என்னக்கு தெரியாது…அந்த பணத்தை பெற்றுக்கொண்டு அவர் மகிழ்ச்சியாக சென்றாரா என்றும் எனக்கு தெரியாது…
ஆனால் மேடம் தன் செலவுக்கு வைத்திருந்த முழுவதையும் கொடுத்துவிட்டு…என்னிடம் இருந்த ஆவணங்களையும் வாங்கிக்கொண்டு…பிறகு அனுப்பிக்கலாம் நித்தி என்றார்….
அப்பொழுது தான் அது அவருடைய மேல்படிப்புக்குக்கான விண்ணப்பம் என்பதை தெரிந்துகொண்டேன்… அவரிடம் அதைப்பற்றி கேட்டேன்… அப்போது அவர் சொன்னது…
நித்தி….
யார் உதவி என்று கேட்டாலும் நாம் செய்ய வேண்டும்….
ஒரு நொடி யோசித்தாலும் மனம் மாறிவிடும்….
உதவ வேண்டும் என்று நினைத்தால் உடனே செய்துவிடு….
உதவிய உடன் பெருமை பட்டுக்கொள்ளாதே…. நம்மை உதவும் இடத்தில் வைத்த இறைவனுக்கு நன்றி சொல் என்றார்…
“Service Above Self” அப்போதைய ரோட்டரி தீம்…
உதவி செய்யவேண்டும் என்று சொல்லுவது மட்டுமின்றி எப்படி செய்வதென்று செயல் மூலம் கற்று கொடுத்தவர் தான் ஜெயந்தி மேடம்….